நம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள்! ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் முடியாதென்று நினைத்த பல காரியங்களைத் தொழில்நுட்பம் செய்து முடித்திருக்கிறது. சயின்ஸ் டெக் திரைப்படங்களில் வரும் சில கூலான கேட்ஜெட்கள் போல் நிஜ வாழ்விலும் சில அதிநவீன சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் இராணுவ படையினருக்காக உருவாக்கப்பட்ட நம்பமுடியாத சில அதிநவீன இராணுவ சாதனங்கள் பற்றிய தகவல்தான் இந்த தொகுப்பு.

உயிரை பணயம் வைத்து அந்நிய சக்திகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க இராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். இவர்களின் உயிரைப் பாதுகாத்து எளிதாய் எதிரிகளை வீழ்த்துவதற்கான பிரத்தியேக ஆயுதங்களை இராணுவத்தினர் உருவாக்கி வருகின்றனர்.

போலாரிஸ் டேகர் (Polaris Dagar)
போலாரிஸ் என்ற நிறுவனம் இந்த போலாரிஸ் டேகர் மிலிட்டரி SUV வாகனத்தை உருவாக்கியுள்ளது. போலாரிஸ் நிறுவனம் சுமார் 60 வருடங்களாக அதிநவீன இராணுவ வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இந்த போலாரிஸ் டேகர் வாகனத்தில் 9 வீரர்கள் பயணிக்கலாம், வாகனத்தின் மேலே மெஷின் கன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் கரடு முரடான பாதையிலும், செங்குத்தான இடங்களிலும் எளிதில் வேகமாகச் செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன SUV வாகனத்தினால் 9 வீரர்களுடன் சுமார் 1.5 டன் எடை வரை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டோகோ (DOGO)
இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு ஆயுத நிறுவனம், இந்த டோகோ ரோலர் ரோபாட்டை உருவாக்கியுள்ளது. இந்த டாக்டிக் காம்பாட் ரோபோட் வாகனத்தின் பெயர் டோகோ அர்ஜென்டினோ என்ற நாயின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த டோகோ ரோபோட்டின் சிறப்பு என்னவென்றால் இதில் ஒரு க்ளோக்-26 பிஸ்டல் (Glock-26 Pistol) வகை துப்பாக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் எதிரியின் நெற்றிப்பொட்டைக் குறிவைத்துத் தாக்க முடியும் என்பதுதான் சிறப்பு.

எதிரிகள் உள்ள இடத்திற்குச் சத்தமில்லாமல் சென்று தாக்கும்படி இந்த டோகோ உருவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ டாக்டிக்கள் கிரௌண்ட் ரோபோட் (Micro Tactical Ground Robot)
குகைகள் மற்றும் வெளி இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டறிவதற்காக இந்த மைக்ரோ டாக்டிக்கள் கிரௌண்ட் ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் உள்ள தடைகளைத் தானாகவே நீக்கி, உயரமான படிக்கட்டுகள், மலைக் குன்றுகள், நீருக்கடியில் என அனைத்து இடங்களிலும் இதனால் பயணிக்க முடியும்.

இதில் 5 கமரா, இன்ஃபிரா ரெட் கமரா மற்றும் மைக் போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோர்டிஸ் K-SRD (Fortis K- SRD)
ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த வகையான எக்ஸோ ஸ்கெலிடன் மாதிரிகளைப் பார்த்திருப்பீர்கள். திரைப்படத்தில் பார்த்த அந்த எக்ஸோ ஸ்கெலிடன் மாதிரிகள் தற்பொழுது நிஜ ரூபம் எடுத்துள்ளது.

எக்ஸோ ஸ்கெலிடன், இராணுவத்தினரின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. சோர்வடையாமல் நீண்ட நேரம் மற்றும் நீண்ட போராட்டத்தைத் சமாளிக்க வழிவகுக்கிறது. இராணுவத்தினரின் திறன், குறிவைக்கும் திறன், செயல்பாட்டு திறன் போன்ற அனைத்து திறனையும் அதிகரிக்கும் இந்த ‘எக்ஸோ ஸ்கெலிடன்’ உண்மையில் ஒரு அதிநவீன ஆயுதம்தான்

ஹால்மாட்ரோ டோர் பிளாஸ்டர் HBD 90 ST (Holmatro Door Blaster HBD 90 ST)

சத்தமில்லாமல் கதவுகளை உடைப்பதற்கான ரிமோட் ஒப்பரேட்டிங் சாதனம்தான் இந்த ஹால்மாட்ரோ டோர் பிளாஸ்டர். டோர் பிளாஸ்டர் என்ற பெயருக்கு ஏற்ப எந்தவகை கதவாக இருந்தாலும் சில நொடிகளில் சத்தமில்லாமல் திறந்துவிடுகிறது.

இந்த டோர் பிளாஸ்டர் சாதனம், பிரஷர் வேக்கம் (Pressure Vaccum) முறையில் இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஹை-பவர் மைக்ரோவேவ் கன் (High Power Microwave Gun)

இந்த ஹை-பவர் மைக்ரோவேவ் கன் ஆளில்லா விமானங்களைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதிக சக்தியுடைய மைக்ரோவேவ் சிக்னலை கொண்டு தொலைவில் உள்ள ஆளில்லா விமானங்களை துவம்சம் செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஹை-பவர் மைக்ரோவேவ் கன் இன் சோதனையின் போது, சுமார் 12 ஆளில்லா விமானம் மற்றும் 4 மோட்டார் வாகனத்தின் மோட்டார்களை வெற்றிகரமாகத் தாக்கி செயல் இழக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் புல்லட் (Smart Bullet)
அடுத்த ஜெனெரேஷன் ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக DARPA நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. வான்டட் (Wanted) திரைப்படத்தில் புல்லட் வளைந்துச் சென்று மையப் புள்ளியைத் தாக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் புல்லட்கள், நீங்கள் குறிவைக்கும் நபர் எங்குச் சென்றாலும் அவரை தொடர்ந்து சென்று தாக்கிவிடும்.

குறி வைத்த இடத்திலிருந்து அந்த நபர் நகர்ந்துவிட்டால் இதில் உள்ள சிப் சென்சார்கள் அவர் நகரும் இடத்தை செல்லும் வழியிலேயே கணித்து, அந்த நபரைச் சுட்டு வீழ்த்திவிடும். இந்த வகை புல்லட்கள் ஸ்னைப்பர் இராணுவத்தினருக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆஸ்திரேலியர்களும் தமிழர்களே - அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்!

Mon Sep 16 , 2019
ஆஸ்திரேலியாவில் பூர்வ பழங்குடியினர்களாக இருப்போர்கள் தமிழர்கள்தான் என்ற ஆய்வு முடிவுகள் அதிர வைக்கும் ஆதாரமாக இருக்கின்றது. டிஎன்ஏ சோதனை, பூமராங், கலாச்சாரம் போன்றவை ஆதராமாக நிருபணமாகியுள்ளது. ஆஸ்திரேலியா என்றால் நமக்கு ஞாபகம் வருவது அது அழகிய தீவு என்றுதான். கங்காரு, பழங்குடியினர். இனி மேல் அதுபோன்று இருக்க போவது கிடையாது. ஏன் என்றால். அந்த நாட்டின் பூர்வ குடிகள் தமிழர்கள். 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியேற்றத்தில் ஆரம்பித்துள்ளனர் தமிழர்கள் […]